லிவர்பூல் வெற்றியை உறுதி செய்த இளம் வீரர் பென்

லிவர்பூல்: இங்கிலாந்து லீக் கிண் ணக் காற்பந்துப் போட்டி ஒன்றில் லீட்ஸ் யுனைடெட் குழுவை எதிர்கொண்ட லிவர்பூல் குழுவின் வெற்றியை உறுதி செய்தார் இளம் வீரர் பென் உட்பர்ன். லிவர்பூலின் ஆன்ட்ஃபீல்ட் மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தின் 76ஆம் நிமிடத்தில் லிவர்பூலின் டிவோக் ஒரிகி முதல் கோல் போடும்வரை அந்தக் குழு திக்கித் திணறியதாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

பின்னர் 81ஆம் நிமிடத்தில் உட்பர்ன் இரண்டாவது கோல் போட்டு வெற்றியை உறுதி செய்த பின்னரே குழுவினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இறுதியில் 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி வாகை சூடிய லிவர்பூலின் இரண்டாவது கோலை போட்டவர் வேல்ஸ் நாட்டின் இளையர். அவருக்கு 17 வயதைக் கடந்து 45 நாட்களே ஆகியுள்ளது என்று கூறப்படு கிறது. இதற்கு முன் லிவர்பூல் குழுவுக்கு ஆக இளம் வயதில் கோல் போட்டவர் என்ற பெரு மையை மைக்கல் ஓவன் வைத் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நேற்றைய ஆட்டத்தில் லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை போடும் அதன் இளம் வீரர் பென் உட்பர்ன் (சிவப்பு சீருடையில் இடமிருப்பவர்). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!