முன்பிருந்த அதே வேகத்துடன் மேன்யூ

மான்செஸ்டர்: இந்தக் காற்பந்து பருவத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி சார்பாக இதற்கு முன் இரண்டு கோல்கள் மட்டுமே போட்டுள்ள பிரான்ஸ் நாட்டு தாக்குதல் ஆட்டக்காரரான ஆண்டனி மார்சியல் அந்தக் குறையை தீர்க்கும்விதமாக நேற்று அதிகாலை வெஸ்ட்ஹேமுடன் நடைபெற்ற இங்கிலாந்து லீக் கிண்ணக் காற்பந்து போட்டியில் இரண்டு கோல்கள் போட்டு வெஸ்ட்ஹேம் குழு 4-1 எனத் தோற்பதற்கு காரணமாக விளங் கினார்.

நேற்றைய ஆட்டத்தில் மார்சியல் மட்டுமல்ல, வெய்ன் ரூனி, மிக்கிடாரியன், ஸ்லாட்டான் இப்ராஹிமோவிச், வெலன்சியா, ஹரேரா என அனைவரும் விளை யாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்கள் தன்னை எதிர்க்கும் குழுக்களை துவைத்து எடுக்கும் பழைய மான்செஸ்டர் யுனைடெட் குழுவைப் பார்த்ததைப் போலவே உணர்ந்தனர்.

நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட்ஹேமுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட்டின் ஆண்டனி மார்சியல் இரண்டாவது கோலை போடும் காட்சி. இவர் வெய்ன் ரூனி, மிக்கிடாரியன், இப்ராஹிமோவிச், ஆகியோருடன் இணைந்து வெஸ்ட்ஹேம் குழுவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!