வெற்றிக்கு ஏங்கும் மொரின்யோ, கூமன்

லண்டன்: எவர்ட்டனும் மான் செஸ்டர் யுனைடெட்டும் மோதும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டம் இன்றிரவு நடைபெறுகிறது. இந்த இரண்டு குழுக்களும் எதிர்பார்த்த அளவுக்கு இதுவரை வெற்றி களைக் குவிக்கவில்லை. களம் இறங்கிய 13 ஆட்டங்களில் இரண்டு குழுக்களும் ஐந்து ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. மான்செஸ்டர் யுனைடெட் 20 புள்ளிகளுடன் லீக் பட்டியலில் ஆறாவது இடத்திலும் எவர்ட்டன் 19 புள்ளிகளுடன் ஏழாவது இடத் திலும் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் எப்படியும் வெற்றியைச் சுவைக்கவேண்டும் என்று இரு குழுக்களின் நிர்வாகிகளும் ஏக்கத்துடன் உள்ளனர். இன்றைய ஆட்டம் எவர்ட்ட னின் சொந்த விளையாட்டரங் கமான குடிசன் பார்க்கில் நடை பெறுகிறது. சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெறவேண்டும் என்று எவர்ட்டனின் நிர்வாகி ரோனல்ட் கூமன் முனைப்புடன் இருக்கிறார். இருப்பினும், அண்மைய கால மாக யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டங்களில் எவர்ட்டன் தோல்வி களையே சந்தித்துள்ளது.

ஜோசே மொரின்யோ. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்