ரியால் குழுவைக் காத்த ராமோஸ்

பார்சிலோனா: ஸ்பானிய லா லீகா காற்பந்தின் நடப்பு வெற்றியாளரான பார்சிலோனா இந்தப் பருவத்தில் வாகை சூட முடியாதபடி பெரும் முட்டுக்கட்டையாக விளங்கி வருகிறது அதன் பரம எதிரியான ரியால் மட்ரிட் காற்பந்துக் குழு. பார்சாவின் நூ காம்ப் அரங்கில் கடந்த வார இறுதியில் நடந்த இவ்விரு குழுக்களுக்கு இடையிலான ‘எல் கிளாசிகோ (தி கிளாசிக்)’ ஆட்டம் 1-=1 எனச் சமனில் முடிந்தது. சுவாரெஸ் 53வது நிமிடத்தில் அடித்த கோலால் முன்னிலை பெற்றது பார்சா. அந்த நிலை 89வது நிமிடம் வரை நீடித்தபோதும் 90வது நிமிடத்தில் தலையால் முட்டி கோலடித்து ஆட்டத்தைச் சமன்படுத்தி பார்சாவுக்கு அதிர்ச்சியளித்தார் ரியால் தலைவர் செர்ஜியோ ராமோஸ்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்தில் சீனாவின் கய் யான் யானிடம் பொருதிய ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். படம்: ஏஎப்பி

14 Nov 2019

தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரரான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சை வெற்றிகொண்ட மகிழ்ச்சியில் ஆஸ்திரியாவின் டோமினிக் தியம். படம்: ஏஎஃப்பி

14 Nov 2019

ஆஸ்திரிய வீரரிடம் தோற்றுப்போன ஜோக்கோவிச்