கோல்காப்பாளரைத் தாக்கிய வாணம்

மெட்ஸ் (பிரான்ஸ்): காற்பந்து ஆட்டத்தின்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ரசிகர்கள் கொளுத்திய வாணங்களில் ஒன்று கோல்காப்பாளரைத் தாக்கியதால் அவரது செவித் திறன் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரான்சின் ‘லீக் 1’ ஆட்டம் ஒன்றில் லியோன் குழுவைத் தனது சொந்த அரங்கில் சந்தித்தது மெட்ஸ் குழு. அரைமணி நேர ஆட்டம் முடிந்த நிலையில் லியோன் கோல்காப்பாளர் அந்தோணி லோபெசின் கால்களுக்கு இடையே பட்டாசு ஒன்று வெடிக்க, அவர் அதிர்ச்சியில் நிலைகுலைந்து விழுந்தார். இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மெட்ஸ் ஒரு கோல் போட்டு முன்னிலை பெற்றிருந்தாலும் லியோன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்