யூரோப்பா லீக்கில் ஸ்பர்ஸ்

லண்டன்: நடப்பு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கில் பிரிவுச் சுற்றுடன் வெளியேறியபோதும் அடுத்த நிலையிலுள்ள யூரோப்பா லீக்கில் தனது இடத்தை உறுதி செய்துகொண்டது இங்கிலாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு.

சாம்பியன்ஸ் லீக்கில் 'இ' பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பர்ஸ் குழு தனது கடைசி ஆட்டத்தில் ரஷ்யாவின் சிஎஸ்கேஏ மாஸ்கோ குழுவை லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் எதிர் கொண்டது. ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் கோலடித்து மாஸ்கோ குழுவை முன்னிலை பெறச் செய்தார் ரஷ்ய ஆட்டக்காரர் ஆலன் ஸாகோவ். ஆயினும் அடுத்த ஐந்து நிமிடங் களிலேயே அந்த முன்னிலையைத் தகர்த்தார் ஸ்பர்ஸ் குழுவின் டெலி அலி. அதோடு ஸ்பர்ஸ் குழு மன நிறைவு அடைந்துவிடவில்லை. ஹேரி கேன் கால்கள் மூலம் வந்த கோலால் 2-1 என்ற முன்னிலை பெற்று அக்குழு ஆட்ட இடை வேளைக்குச் சென்றது.

பிற்பாதியிலும் அலியின் அபார ஆட்டம் தொடர்ந்தது. 77வது நிமி டத்தில் அவர் தலையால் முட்டிய பந்தை எதிரணி கோல்காப்பாளர் தம் இடக்கையால் தடுத்தபோதும் அது தரையில் பட்டு மீண்டும் எழும்பி வலைக்குள் புகுந்தது. இதையடுத்து, 3-1 என்ற கணக் கில் வெற்றி ஸ்பர்ஸ் வசமானது. ஆறு ஆட்டங்கள் முடிவில் இரு வெற்றிகளுடன் ஏழு புள்ளி களைப் பெற்று மூன்றாமிடம் பிடித் தது ஸ்பர்ஸ். இதனால் யூரோப்பா லீக்கில் விளையாடும் வாய்ப்பை அக்குழு பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கின் பிரிவுச் சுற்றில் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிகள் யூரோப்பா லீக்கின் '32 அணிகள்' சுற்றுக்குத் தகுதிபெறும் என்பது விதிமுறை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!