செல்சி தொடர் வெற்றி; 2வது இடத்தில் லிவர்பூல்

லண்டன்: சண்டர்லேண்ட் குழு வுக்கு எதிரான ஆட்டத்தில் 1=0 எனும் கோல் கணக்கில் செல்சி வென்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 10 ஆட்டங்களில் அது வெற்றியைச் சுவைத்து 40 புள்ளிகளுடன் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முன்னிலை வகிக் கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் செக் ஃபேபிரிகாஸ் செல்சியின் வெற்றி கோலைப் போட்டார். "செல்சி வீரர்கள் லீக் பட்டி யலைப் பார்க்காமல் அடுத்து வர இருக்கும் மூன்று ஆட்டங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம். கிறிஸ் மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமாயின் அதற்கு முன்பு நடைபெறும் ஆட்டங்களை நாங் கள் கைப்பற்றவேண்டும்," என்று செல்சியின் நிர்வாகி அண்டோனி யோ கோன்டே தெரிவித்தார். இதற்கிடையே, லீக் பட்டியலின் இரண்டாவது இடத்துக்கு லிவர் பூல் முன்னேறி உள்ளது.

செல்சியின் டியேகோ கோஸ்டா (நடுவில்) வலை நோக்கி அனுப்பிய பந்தைப் பாய்ந்து தடுக்கும் சண்டர்லேண்ட் கோல்காப்பாளர் (வலது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!