அரையிறுதியில் இந்திய அணி

லக்னோ: ஜூனியர் உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டியின் அரையிறுதிக்குப் போட்டியை ஏற்று நடத்தும் இந்தியா தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயி னுடன் மோதிய இந்தியா 2-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மார்க் செர்ராஹிமா கோல் போட்டு விளையாட்டரங்கத்தில் கூடி இருந்த இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இடைவேளையின்போது 1-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் 57வது நிமிடத் தில் இந்தியாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வந்த பந்தை சிம்ரன்ஜீத் சிங் வலைக்குள் சேர்த்து ஆட்டத்தைச் சமன் செய்தார். 66வது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் இந்தியாவின் வெற்றி கோலைப் போட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!