குழுவுக்காக அதன் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தமது 500வது கோலைப் போட் டுள்ளார். மெக்சிக்கோவின் கிளப் அமெரிக்கா குழுவுக்கு எதிரான கிளப் உலகக் கிண்ணக் காற் பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ரொனால்டோ இந்தச் சாதனையைப் படைத்தார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியால் மட்ரிட் 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் விளைவாக கிளப் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ரியால் தகுதி பெற்றுள்ளது.
தமது 500வது கோலைப் போடும் ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்