ஆர்சனலை வெற்றிகொள்ளத் துடிக்கும் சிட்டி

மான்செஸ்டர்: கடைசியாக நடந்த ஆறு மோதல்களில் ஒருமுறைகூட மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவால் ஆர்சனல் குழுவை வெல்ல இயலவில்லை. இந்த நிலையில், இன்றிரவு தனது சொந்த எட்டிஹாட் விளை யாட்டரங்கில் நடக்கும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் அதற்குப் பதிலடி தந்து இதற்குமுன் கிட்டிய ஏமாற்றங்களுக்கு மருந்து தேடும் முனைப்பில் இருக்கிறது சிட்டி. இந்த இபிஎல் பருவத்தில் தொடர்ந்து 14 ஆட்டங்களாக வெல்லமுடியாத குழுவாக விளங்கி வந்த ஆர்சனலுக்குக் கடந்த வார மத்தியில் தோல்வியைப் பரிசாகத் தந்தது எவர்ட்டன்.

சான்செஸ் அடித்த கோலால் ஆர்சனல் முன் னிலை பெற்றாலும் மீண்டெழுந்த எவர்ட்டன் இரு கோல்களைப் போட்டு வெற்றியை ருசித்தது. மாறாக, லெஸ்டர் சிட்டியிடம் 4-2 எனத் தோற்றதால் நெருக்கடி யில் இருந்த சிட்டி கடந்த புதனன்று நடந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் வாட்ஃபர்ட் குழுவை வென்று வெற்றிப் பாதைக் குத் திரும்பியது. இப்போதைக்குப் புள்ளிப் பட்டி யலில், ஆர்சனலைவிட ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ள சிட்டி 33 புள்ளிகளுடன் நான்காம் நிலையில் இருக்கிறது. ஆகையால் இன்றைய ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் அக்குழு பட்டியலில் மேலேறும். செல்சிக்கு எதிரான ஆட்டத் தில் ஒழுங்கீனமாக நடந்துகொண் டதால் சிட்டி வீரர்கள் அகுவேரோ, ஃபெர்னாண்டினோ ஆகியோருக்கு முறையே நான்கு மற்றும் மூன்று ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டன. ஆகவே, அவ்விருவரும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க இயலாது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!