கைகொடுத்த பின்வரிசை

சென்னை: தொடரை ஏற்கெனவே இழந்துவிட்டாலும் இந்திய கிரிக் கெட் அணிக்கு எதிரான கடைசி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வென்று மானத்தோடு நாடு திரும்ப வேண்டும் என்ற உத்வேகத்துடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி 'டிரா'வில் முடிய, அடுத்த மூன்று போட்டி களையும் வென்று தொடரைத் தன்வசப்படுத்தியது இந்திய அணி. இந்நிலையில், கடைசி ஆட்டம் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது.

முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங் களை எடுத்த இங்கிலாந்து அணி நேற்று இரண்டாம் நாளிலும் பந்த டிப்பில் மிரட்டியது. பென் ஸ்டோக்ஸ் (6), ஜோஸ் பட்லர் (5), மொயீன் அலி (146) என 37 ஓட்டங்களைச் சேர்ப்ப தற்குள் அந்த அணி மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆயினும், பின்வரிசை வீரர்கள் அவ்வணிக்குக் கைகொடுத்தனர். 8வது விக்கெட்டுக்கு அறிமுக வீரர் லியம் டாசனும் அடில் ர‌ஷீத் தும் சேர்ந்து 108 ஓட்டங்களைக் குவித்தனர்.

அறிமுகப் போட்டி என்றபோதும் இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கி 66 ஓட்டங்களுடன் இறுதி வரை களத்தில் நின்ற இங்கிலாந்து வீரர் லியம் டாசன். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!