‘நடுவர்களால்தான் ஆர்சனல் தோற்றது’

மான்செஸ்டர்: இங்கிலாந்துக் காற் பந்து நடுவர்கள், விலங்கியல் தோட்டத்தில் இருக்கும் சிங்கங் கள்போல பாதுகாக்கப்படுகின் றனர் என்று ஆர்சனல் காற்பந்துக் குழுவின் நிர்வாகி ஆர்சன் வெங்கர் குறைகூறி இருக்கிறார். நடுவரின் மோசமான முடிவு களால்தான் தமது குழு மான் செஸ்டர் சிட்டி குழுவிடம் தோற் றது என்று கூறிய வெங்கர், இதுபோன்ற தவறான முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றார். ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியின் சொந்த அரங்கில் அதை எதிர்கொண்டது ஆர்சனல். ஆட்டத்தின் ஐந்தாம் நிமிடத் திலேயே தியோ வால்காட்டின் கோல் மூலம் முன்னணி பெற்றது ஆர்சனல்.

முற்பாதி ஆட்டத்திலும் ஆர்சனல் குழுவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு திடலுக்குத் திரும்பிய மான்செஸ்டர் சிட்டி குழு புதிய ஒரு குழுவாக, உத்வேகத்துடன் விளையாடியது. லிரோய் சானே, ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் அடித்த கோல்களால் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் சிட்டி ஆட்டத்தில் வாகை சூடியது. ஏற்கெனவே கடந்த வாரம் எவர்ட்டன் குழுவிடம் இதேபோல ஒரு கோல் முன்னணி பெற்றும் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது ஆர்சனல். இம்முறை சிட்டி ஒரு கோல் பின்னணியிலிருந்து மீண்டு ஆட் டத்தை வெற்றிகொண்டதன் மூலம் ஆர்சனல் குழுவை முந்திக் கொண்டு லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!