ஆசியக் கிண்ணப் போட்டி: தகுதி பெற லயன்ஸ் இலக்கு

ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கிண்ணக்காற்பந்துப் போட்டியில் மீண்டும் போட்டியிடவேண்டும் என்று சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழு மிகுந்த முனைப்புடன் உள்ளது. ஆகக் கடைசியாக 1984ஆம் ஆண்டில் போட்டியை ஏற்று நடத்தியபோது சிங்கப்பூர் அதில் முதல்முறையாக விளையாடியது. அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் இப்போட்டியில் பங்கெடுத்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூன்றாவது தகுதிச் சுற்றில் எந்தெந்தப் பிரிவு களில் எந்தெந்தக் குழுக்கள் இடம்பெறும் என்பதை நிர்ண யிக்கும் குலுக்கல் முறை நேற்று முன்தினம் அபு தாபியில் நடை பெற்றது. அதன்படி, சிங்கப்பூர் 'இ' பிரிவில் இடம்பெறுகிறது. பஹ் ரேன், டர்க்மெனிஸ்தான், தை வான் ஆகிய குழுக்களுடன் அது மோதவிருக்கிறது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் குழுக்கள் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!