ஐவரி கோஸ்ட்டை வெளியேற்றிய மொரோக்கோ

ஒயேம்: ஆப்பிரிக்க நாடுகளுக்கான காற்பந்துப்போட்டியில் நடப்பு வெற்றியாளரான ஐவரி கோஸ்ட் தோல்வியைத் தழுவி போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. முதல் சுற்றுக்கான கடைசி ஆட்டத்தில் மொரோக்கோவிடம் அக்குழு 1-0 எனும் கோல் கணக்கில் போராடித் தோற்றது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு குழுக்ளும் வெற்றிக்குக் குறிவைத்து முனைப்புடன் விளையாடின. ஆனால் இரு குழுக்களின் தற்காப்பு அரண்களும் சிறிதுகூட அசராமல் இருந்ததால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதும் போடப்படவில்லை. இடைவேளையின்போது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு குழுக்களுக்கும் இடையிலான பாராட்டம் தொடர்ந்தது. இந்நலையில், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் மொரோக்கோவின் ர‌ஷீது அலியூ வெகுதொலைவில் இருந்து அனுப்பிய பந்து ஐவரி கோஸ்ட் குழுவின் கோப்பாளரைக் கடந்து சென்று வலையைத் தொட்டது. எதிர்பாராத வகையில் இந்தப் பின்னடைவைச் சந்தித்த ஐவரி கோஸ்ட் அதிர்ச்சியில் உறைந்தது.

நடப்பு வெற்றியாளர் ஐவரி கோஸ்ட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் சாலமன் கலூ (நடுவில்) பந்தை நெருங்குவதற்குள் அதை வான் நோக்கிப் பறக்கவிடுகிறார் மொரோக்கோவின் தற்காப்பு ஆட்டக்காரர் மேனுவல் டி கோஸ்டா (இடது). படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!