மீண்டும் மோதும் சகோதரிகள்

மெல்பர்ன்: விளையாட்டாளர்களைப் பொறுத்தமட்டில் வயது ஏற ஏற அவர்களின் ஆட்டத்திறன் குறை வதைத்தான் கண்டிருக்கிறோம். ஆனால், அமெரிக்க டென்னிஸ் சகோதரிகளான செரீனா வில்லி யம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோரைப் பொறுத்தமட்டில் அது நேர்மாறாக இருக்கிறது. ஆஸ்திரேலிய ஓப்பன் டென் னிஸ் தொடரின் இறுதிச் சுற்றில் நுழைந்த 35 வயதான செரீனா, 23வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஸ்டெஃபி கிராஃபின் சாதனையை மிஞ்சக் காத்திருக்கிறார். இறுதிப் போட்டி யில் தம்மைவிட ஓராண்டு மூத்த தன் சகோதரி வீனஸ் வில்லியம்சை அவர் எதிர்கொள்கிறார்.

இவர்கள் இருவரும் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் இதற்கு முன் எட்டு முறை மோதியுள்ளனர். அதில் ஆறு முறை செரீனா வெற்றி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில் செரீனா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் குரோவே‌ஷியாவின் மிர்யானா லுசிச் பரோனியை மிக எளிதாகத் தோற்கடித்தார். மற் றோர் அரையிறுதியில் சக அமெ ரிக்க வீராங்கனை கோக்கோ வாண்டவேஜை 6-7, 6-2, 6-3 எனச் சற்றுப் போராடி வீழ்த்தினார் வீனஸ். இறுதிப் போட்டியில் செரீனா மகுடம் சூடும் பட்சத்தில் உலகத் தரவரிசையிலும் அவர் உச்சத்தை எட்டுவார். இறுதிப் போட்டியில் ஃபெடரர் உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதியில் சக நாட்டு வீரர் ஸ்டானிஸ்லஸ் வாவ் ரிங்காவை 7-5, 6-3, 1-6, 4-6, 6-3 என்ற செட்களில் போராடி வென்றார்.

மற்றோர் அரையிறுதிப் போட்டி யில் ஸ்பெயினின் ரஃபாயல் நடாலும் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவும் மோதவுள்ளனர். இந்தியாவின் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் அரை இறுதிக்குத் தகுதி பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!