அரையிறுதி வாய்ப்பைப் பறிகொடுத்த ரியால்

மட்ரிட்: நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 'ஃப்ரீ கிக்' மூலம் அருமையாக கோலடித்தும் ஸ்பானிய அரசர் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றிலேயே ரியால் மட்ரிட் குழு வெளியேற நேர்ந்தது. செல்ட்டா வீகோ குழுவுடனான காலிறுதி இரண்டாம் சுற்று ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது. காலிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 4-3 என முன்னிலை பெற்றதால் செல்ட்டா குழு அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

பல ஆட்டக்காரர்கள் காயம் அடைந்து வெளியிலிருந்த நிலை யில், டேனிலோ சொந்த கோல் அடித்ததும் ரியாலுக்குப் பின்ன டைவாக அமைந்தது. ரொனால்டோ அடித்த அற்புத கோல் அந்த முன்னிலையை ஈடு செய்தது. இருப்பினும், ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது கோலடித்து செல்ட்டாவை மீண் டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார் டேனியல் வாஸ். கூடுதல் நேரத்தில் லூக்காஸ் வாஸ்குவெஸ் போட்ட கோலால் ரியால் தோல்வியிலிருந்து தப்பி யது. இல்லையெனில், கடைசி யாகத் தான் ஆடிய நான்கு போட்டிகளில் 3வது தோல்வியை அது சந்தித்திருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!