கடைசி நேர கோலால் லிவர்பூல் வெளியேற்றம்

லிவர்பூல்: ஆட்டம் முடியும் தறுவாயில் ஷேன் லாங் அடித்த கோல் மூலம் லிவர்பூல் குழுவிற்கு எதிராக மறக்க முடியாத வெற் றியை ஈட்டி, 38 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் கிண்ண இறுதிப் போட்டியில் அடியெடுத்து வைத் தது சௌத்ஹேம்டன் காற்பந்துக் குழு. இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த அரையிறுதி முதல் சுற்று ஆட்டத்தில் நேதன் ரெட்மண்ட் அடித்த கோலால் 1-0 என சௌத்ஹேம்டன் முன்னிலை பெற் றிருந்தது. இந்நிலையில், நேற்று அதி காலை லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் அரங்கில் நடந்த அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டத்தில் குறைந்தது சமநிலை காணும் இலக்குடன் அக்குழு களமிறங் கியது.

முக்கிய தற்காப்பு ஆட்டக்காரர் விர்ஜில் வேன் டைக் இல்லாத நிலையில், அதிக அனுபவமில்லா ஜேக் ஸ்டீபன்ஸ் மீது அக்குழு அதிகம் நம்பிக்கை வைத்திருந் தது. தொடக்கத்தில் பதற்றமாக இருந்தாலும் போகப் போக தற் காப்பில் அசத்தினார் ஸ்டீபன்ஸ். சொந்த அரங்கில் விளையாடி னாலும் சௌத்ஹேம்டன் வீரர் களின் அபாரமான தற்காப்பை லிவர்பூல் வீரர்களால் முறியடிக்க முடியவில்லை. முற்பாதி ஆட்டத்தில் கோல் போடுவதற்குக் கிடைத்த மூன்று வாய்ப்புகளை சௌத்ஹேம்டன் வீரர்கள் வீணாக்கினர். அதே நேரத்தில், இரண்டு நல்ல வாய்ப்பு களை கோலாக்கத் தவறியதால் லிவர்பூல் தாக்குதல் ஆட்டக்காரர் டேனியல் ஸ்டரிஜுக்கும் அவர்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டு உள்ளனர்.

அடுத்த மாதம் 26ஆம் தேதி லண்டன் வெம்ப்ளி அரங்கில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டி யில் மான்செஸ்டர் யுனைடெட் அல்லது ஹல் சிட்டி குழுவை சௌத்ஹேம்டன் எதிர்த்தாடும். யுனைடெட்-ஹல் சிட்டி இடை யிலான அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டம் இன்று அதிகாலை நடைபெறவிருந்தது. முதல் ஆட் டத்தில் 2-0 என வென்று யுனை டெட் முன்னிலை பெற்றிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!