போல்ட்டின் தங்கம் பறிப்பு

லோஸான் (சுவிஸ்): 'மின்னல் வேக வீரர்' என அழைக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட், தாம் வென்ற ஒன்பது ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றை இழக்கிறார். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் போல்ட், மைக்கல் ஃபிரேட்டர், நெஸ்ட்டா கார்ட்டர், அசாஃபா பொவெல் ஆகியோர் அடங்கிய ஜமைக்கா அணி 37.10 வினாடி களில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த நிலையில், நெஸ்ட்டா கார்ட்டர் 'மீத்தைல் ஹெக்சேன் அமீன்' எனும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியது மறுசோதனைகளிலும் உறுதியாகி இருக்கிறது.

இதனால், ஜமைக்கா வீரர்கள் நால்வரிடம் இருந்தும் தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்படும் என்று அனைத்துலக ஒலிம்பிக் மன்றம் அறிவித்திருக்கிறது. 2008, 2012, 2016 என்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 100 மீ., 200 மீ., 4x100 மீ., ஓட்டப் பந்தயங்களில் தங்கத்தை வென்றதால் இது வரையில் தோன்றிய திடல்தட வீரர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்படுகிறார் போல்ட். ஊக்க மருந்து மோசடிகள் திடல்தடப் போட்டிகளை மையம் கொண்டிருந்த சூழலில் போல்ட் டின் செயல்பாடுகள் அவ்விளை யாட்டின் மீதான ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முக்கிய காரணமாக விளங்கியது என்று சொன்னால் மிகையில்லை.

ஒலிம்பிக் தங்கத்தை இழக்கப் போகும் தகவலறிந்து போல்ட் மிகவும் சோகமாகிவிட்டதாக அறி யப்படுகிறது. "கார்ட்டர் ஊக்கமருந்து எடுத் துக்கொண்டது உறுதியானதை அறிந்து மனமுடைந்து போயிருக்கி றேன். கடந்த பல ஆண்டுகளாகக் கடுமையாகப் பயிற்சி செய்து தங்கப் பதக்கங்களை வென்று, உலக வெற்றியாளராகத் திகழ்ந்து வருகிறேன். எதிர்பாராமல் இப்படிச் சில விஷயங்கள் நடக்கலாம். தங் கத்தைத் திருப்பியளிக்க வேண்டு மெனில் அதைத் தந்துவிடுவேன். அதனால் எனக்கு ஒரு பிரச்சி னையும் இல்லை," என்று போல்ட் சொன்னதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி கூறியது.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் 4x100 மீ. அஞ்சல் ஓட்டத்தில் வென்ற தங்கப் பதக்கத்தைப் பறிகொடுக்கும் ஜமைக்கா திடல்தட வீரர்கள் (இடமிருந்து) அசாஃபா பொவெல், நெஸ்ட்டா கார்ட்டர் (ஊக்கமருந்து எடுத்துக்கொண்டவர்), உசேன் போல்ட், மைக்கல் ஃபிரேட்டர். கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!