கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் சானியா

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தி யாவின் சானியா மிர்சா-குரோ வே‌ஷியாவின் இவான் டோடிக் இணை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரேலி யாவின் சமந்தா ஸ்டோசர் - சேம் குரோத் இணையை சானியா இணை எதிர்கொண்டது. முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் சானியா இணை வெல்ல, அதே வித்தியாசத்தில் இரண்டாவது செட்டை ஆஸி. இணை கைப்பற் றியது. இதையடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க 'டை பிரேக்கர்' முறை பின்பற்றப்பட்டது. இதில் 10-5 என வென்று சானியா இணை இறுதிக்குள் நுழைந்தது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்று இருப்பது இது ஏழாவது முறை. அதில் மூன்று முறை அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!