காற்பந்து அரங்கத்திற்கு மின்விநியோகம் துண்டிப்பு

ரியோ டி ஜெனிரோ: 2014 உலகக் கிண்ணக் காற்பந்து இறுதி ஆட்டம், 2016 ஒலிம்பிக் தொடக்க விழா, நிறைவு விழா ஆகிய பிரசித்தி பெற்ற நிகழ்வுகள் இடம் பெற்ற பிரேசிலின் மரக்கானா விளையாட்டரங்கம் நேற்று முன் தினத்திலிருந்து இருளில் மூழ்கி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து மின்கட்டணம் செலுத்தா ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் மூன்று மில்லியன் ரியாய்ஸ் (S$939,937) நிலுவைத் தொகை இருப்பதாகக் கூறப்படு கிறது. அதில் 1.3 மில்லியன் ரியாய்ஸ் தொகையை அதன் உரி மையாளர்களும் மீதத் தொகையை ரியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர் களும் செலுத்தவேண்டும்.

2016 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் அந்த அரங்கம் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் செலுத்த வேண்டிய தொகை தொடர்பில் அக்குழு 'லைட்' மின்சார நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!