கடும் போராட்டத்துக்குப் பின் வென்ற ஃபெடரர்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான பட்டத்தை சுவிட் சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் (படம்) வென்றுள்ளார். இதுவே 35 வயது ஃபெடரர் வென்றுள்ள 18வது கிராண்ட் சிலாம் பட்டமாகும். அதுமட்டுமல்லாது, கடந்த ஐந்தாண்டுகளில் இதுவே அவர் வென்றுள்ள முதல் கிண்ண மாகும். நேற்று மாலை மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஃபெடரரும் ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபயேல் நடாலும் மோதினர். ஆட்டம் தொடங்கியதி லிருந்து இருவரும் விட்டுக் கொடுக்காமல் கிண்ணத்தை வெல்லவேண்டும் என்ற முனைப் புடன் விளையாடினர். முதல் செட்டை ஃபெடரர் 6=4 என்று கைப்பற்றினார். துவண்டுவிடாமல் ஆடிய 30 வயது நடால் அடுத்த செட்டை 6=3 என வென்றார்.

மூன்றாவது செட் ஃபெடரரிடம் செல்ல, நான் காவது செட்டை நடால் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஐந்தாவது செட் தேவைப்பட்டது. இரு வீரர்களும் களைப்புக்கு இடம்கொடுக்காமல் போராடினர். இறுதியில் ஃபெடரரின் கையோங் கியது. இறுதி செட்டை அவர் 6=3 என்று வென்று கிண்ணம் ஏந்தினார். இந்த வெற்றியின் மூலம் மூன்று வெவ்வேறு கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை வென்ற முதல் வீரர் எனும் பெருமை ஃபெடரரைச் சேரும். போராடித் தோற்ற நடால் இதுவரை டென்னிஸ் சகாப்தம் பீட் சாம்பிராசைப் போல 14 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!