ஓராண்டுக்குப் பின் முதல் கோல் மான்செஸ்டர்: பிரபல ஜெர்மனி

காற்பந்து ஆட்டக்காரர் பாஸ்டியன் ஸ்வைன்ஸ்டைகர், மான்செஸ்டர் யுனைடெட் குழுவில் இடம்பெற்று இருந்தாலும் அதன் நிர்வாகியாக மொரின்யோ பதவியேற்ற பின்னர் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைப்பது மிக அரிதாகிவிட்டது. இந்த நிலையில், 385 நாட் களுக்குப் பிறகு விகன் அத்லெட் டிக் குழுவிற்கு எதிரான எஃப்ஏ கிண்ண நான்காம் சுற்று ஆட்டத் தில் ஆட்ட நேரமான 90 நிமிடங் களும் ஸ்வைன்ஸ்டைகர் களத்தில் இருக்க வாய்ப்புக் கொடுத்தார் மொரின்யோ.

இந்த வாய்ப்பை ஸ்வைன்ஸ் டைகரும் மிகச் சரியாகப் பயன் படுத்திக்கொண்டார். ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் அவர் கடத்தித் தந்த பந்தை மிக அருமையாக வலைக்குள் தள்ளி யுனைடெட்டின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார் மருவான் ஃபெல்லைனி. கோல் கணக்கைத் தொடங்க உதவிய ஸ்வைன்ஸ்டைகரே அதை முடித்தும் வைத்தார். 81வது நிமி டத்தில் அவர் போட்ட அற்புதமான கோலால் யுனைடெட் 4-0 என வெற்றி பெற்றது. கிறிஸ் ஸ்மாலிங் (57'), ஹென் ரிக் மகிதார்யான் (73') ஆகியோர் யுனைடெட் சார்பில் விழுந்த மற்ற இரு கோல்களை அடித்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!