‘லிவர்பூல் வீரர்களே! விழித்தெழுங்கள்’

லண்டன்: லிவர்பூல் காற்பந்துக் குழுவிற்கு இந்த ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமைந்து இருக்கிறது. 2017ல் இதுவரை லிவர்பூல் ஐந்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள போதும் இன்னும் ஓர் ஆட்டத்தில் கூட வெல்லவில்லை. மூன்று ஆட்டங்களில் சமநிலையும் இரு ஆட்டங்களில் தோல்வியும் கண்டு உள்ளது.

அதிலும், பட்டியலில் 'ரெலி கேஷன்' நிலையிலுள்ள ஹல் சிட்டி குழுவிடம் நேற்று முன்தினம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது லிவர்பூல் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தது. ஹல் சிட்டி சார்பில் பங்கேற்ற முதல் ஆட்டத்திலேயே கோலடித்து அசத்தினார் ஆல்ஃபிரட் டியாயே. ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் இருந்தபோது ஒமர் நியாஸ் அடித்த கோலால் ஹல் சிட்டியின் வெற்றி உறுதியானது.

தடைகளை முறியடித்து கோலடிக்க முயலும் ஹல் சிட்டி வீரர் ஹெர்னாண்டஸ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!