கிரிக்கெட்: செல்வாக்கை இழக்கிறது இந்தியா

துபாய்: இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றாலும் கிரிக்கெட் அளவிற்கு அது பிரபலமாகவும் இல்லை; பரவலாக விளையாடப்படுவதும் இல்லை. அனைத்துலக அளவில் கிரிக் கெட் மூலம் அதிக வருவாய் ஈட்டப்படுவது இந்தியாவில்தான். இதனால் 'ஐசிசி' எனப்படும் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் ஈட்டும் வருவாயில் ஆக அதிக விழுக்காடு இந்தியாவுக்கே வழங் கப்பட்டு வருகிறது.

ஐசிசி வருவாய்ப் பகிர்வில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரே லியா ஆகிய மூன்று நாடுகளும் அதிக பலனடையும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு விதி முறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது பாகிஸ் தான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் இதனைக் கடுமையாக எதிர்த்தன.

இந்நிலையில், அம்மூன்று நாடு களுக்கு மட்டும் அதிக பங்கு அளிக்காமல், டெஸ்ட் போட்டி களில் விளையாடும் தகுதி பெற் றுள்ள எல்லா நாடுகளுக்கும் சம பங்கு வழங்கும் வகையில் விதி மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் தங்களுக்குப் பெரும் வருமான இழப்பு ஏற்படும் எனக் கூறி இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதைக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதனிடையே, துபாயில் சனிக் கிழமை நடந்த ஐசிசி கூட்டத்தில் வருவாய்ப் பகிர்வு முறையில் மாற் றம் கொண்டு வர கொள்கை அளவில் ஐசிசி ஒப்புக்கொண்டது. விதித் திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பில் இலங்கையும் இந் தியாவும் மட்டுமே அதற்கெதிராக வாக்களித்தன. மற்ற நாடுகள் விதித் திருத்தத்தை ஆதரித்தன. வாக்கெடுப்பில் ஸிம்பாப்வே பங் கேற்கவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!