கடைசி நேரத்தில் கோல்; கிண்ணம் வென்ற கெமரூன்

லிப்ரேவில்: ஆப்பிரிக்க நாடு களுக்கான காற்பந்துப் போட்டியில் கெமரூன் கிண்ணம் ஏந்தியுள்ளது. நேற்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் எகிப்துக்கு எதிராக 2-1 எனும் கோல் கணக்கில் அது வாகை சூடியது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகே கெமரூன் வெற்றியைச் சுவைத்தது. முற்பாதி ஆட்டத்தில் எகிப்து கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆர்சனலுக்காகவும் விளையாடும் எகிப்து வீரர் முகம்மது எல்னெனி ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இனி வெற்றி நிச்சயம் என்று கருதி எகிப்து கொண்டாடியது. இடைவேளையின்போது அக்குழு 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போட்டியில் எகிப்து போட்டி யிடுவது இதுவே முதல்முறை. எட்டாவது முறையாக ஆப் பிரிக்க நாடுகளுக்கான காற்பந்துப் போட்டியின் கிண்ணத்தை வென்று வேறு எந்த ஆப்பிரிக்க குழுவும் நிகழ்த்தியிராத சாதனை யைப் படைக்க எகிப்து கொண்டிருந்த கனவு நினைவேறும் என்பது போல தோன்றியது. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் நடந்ததோ வேறு. பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தைச் சமன் செய்யும் முனைப்புடன் கெமரூன் தாக்குதலில் இறங் கியது.

கடும் போராட்டத்திற்குப் பிறகு கிண்ணம் வென்ற கெமரூன் ஆட்டக்காரர்கள் தங்கள் விடாமுயற்சிக்குப் பரிசாகக் கிடைத்த கிண்ணத்தை ஏந்தி மகிழ்கின்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!