கும்பிளே: பங்ளாதே‌ஷுக்கு எதிரான டெஸ்டிலும் வெற்றி தொடரும்’

ஹைதராபாத்: பங்ளாதேஷ் கிரிக் கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா - பங்ளாதேஷ் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று காலை 9.00 மணிக்குத் தொடங்­குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதேபோல பங்ளா தே‌ஷுக்கு எதிரான டெஸ்டிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதையொட்டி இந்திய அணியின் பயிற்றுவிப்­பாளர் கும்பிளே செய்தியாளர்­களைச் சந்தித்துப் பேசினார்.

"இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றோம். அதே உத்­வேகத்தை இந்தப் போட்டியி­லும் தொடர விரும்புகிறோம். உள்ளூர் சீசன் இதுவரை எங்­களுக்கு நன்றாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று அதன் மூலம் நம்பிக் கையை அடுத்த போட்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இந்தப் போட்டிக்குப் பிறகு மேலும் சில டெஸ்டுகளில் விளையாட உள்­ளோம்," என்றார் கும்பிளே.

பங்ளாதேஷ் அணியை ஒரு மேம்பட்டு வரும் அணி என்று கூறிய அவர், "அண்மை­யில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்கள் உண்­மையிலேயே சிறப்பாகச் செயல்­பட்டு இருந்தனர். நிச்சயம் அவர்களை நாங்கள் மதித்தே ஆக வேண்டும். சில தரமான வீரர்கள், ஆல் - ரவுண்டர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்­கிறார்கள். எனவே இது சுவா­ரஸ்யமான டெஸ்ட் போட்டியாக இருக்கப்போகிறது," என்றார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்­பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியது குறித்துப் பேசப் படுவதைச் சுட்டிக்காட்டி கும்பிளே, வெற்றிக்கு வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததையும் மறக்கக் கூடாது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!