‘பட்டம் வெல்வது மிகக் கடினம்’

போர்ன்மத்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மான் செஸ்டர் சிட்டி குழு இரண்டாம் இடத்திற்கு முன்னேறினாலும் பட்டம் வெல்வது மிகவும் கடினம் என்று அதன் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார். போர்ன்மத் குழுவிற்கெதிராக நேற்று அதிகாலை நடந்த ஆட் டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சிட்டி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் இளம் வீரர் கேப்ரியல் ஜீசஸ் காயம் காரணமாக வெளியேறியது சிட்டிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆயினும், மாற்று வீரராக வந்த செர்ஜியோ அகுவேரோவின் எழுச்சி மிக்க ஆட்டம் அந்த அணியை ஊக்குவிப்பதாக அமைந்தது. 29வது நிமிடத்தில் சிட்டியின் முதல் கோலை அடித்தார் ரஹீம் ஸ்டெர்லிங். 69வது நிமிடத்தில் அகுவேரோ உதைத்த பந்து எதிர் அணி வீரர் டைரோன் மிங்சின் காலில் பட்டு வலைக்குள் புக, சிட்டியின் வெற்றி உறுதியானது.

மான்செஸ்டர் சிட்டி குழுவின் முதல் கோலை அடிக்கும் ரஹீம் ஸ்டெர்லிங் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!