பிறந்தநாளில் பார்சிலோனாவுக்கு பிரம்படி கொடுத்த பிஎஸ்ஜி

பாரிஸ் செயின்ட் ஜெர்மேன் (பி.எஸ்.ஜி.) குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர்களான டீ மரியா, கவானி ஆகியோர் தங்கள் பிறந்த நாளில் கோல் அடித்து குழுவின் வெற்றியை கொண்டாடினர். 'சாம்பியன்ஸ் லீக் கடைசி 16' சுற்றில், நேற்று சொந்த அரங்கில் காற்பந்து ஜாம்பவனான பார்சிலோனா குழுவை அது 4=0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காற்பந்து உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் கிடைத்த 'ஃப்ரி-கிக்' வாய்ப்பை அற்புதமாகக் கோலாக்கினார் தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடிய டீ மரியா.

முதல் பாதி ஆட்டம் முடிவ தற்குள், ஜெர்மானிய ஆட்டக்காரர் ஜூலியன் டிரெக்ஸ்லர் மற்றொரு கோலைப் புகுத்தி ஆட்ட நிலவரத்தை 2-0 என ஆக்கினார். பி.எஸ்.ஜி.யின் ஆதிக்கத்திற்கு பார்சிலோனாவுக்கு பதிலே இல்லை. இரண்டாம் பாதியில் மீண்டும் 'பெனால்ட்டி' எல்லைக்கு வெளியிலிருந்து லாவகமாக பந்தை வளைத்து கோலாக்கினார் டீ மரியா. இதற்கு பிறகு பார்சிலோனாவின் மெஸ்ஸியும் சக நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் தள்ளாட, அதிரடியாக பெனால்ட்டி எல்லையினுள் நுழைந்து இறுதிக் கோலை அடித் தார் தன் 30வது பிறந்தநாளைக் கொண்டாடிய கவானி.

தன் 29வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிஎஸ்ஜி ஆட்டக்காரர் டீ மரியா ஆட்டத்தில் இரண்டு அற்புதமான கோல்களைப் புகுத்தி தன் குழுவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!