மீண்டும் எஸ்டி விளையாட்டு வீரர் விருது பெற்ற ஸ்கூலிங்

சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங்குக்கு நேற்று எஸ்டி விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இரண்டாவது தடவை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை ஸ்கூலிங் பெறுகிறார். முதல் எஸ்டி விருதை 2015ஆம் ஆண்டு பெற்றார். 'ஃபேரர் ஹோட்டல் அண்ட் ஸ்பா'வில் நடந்த இந்த விருதளிக்கும் விழாவில் ஜோசப் ஸ்கூலிங்கின் பெற் றோர் கோலின், மே ஸ்கூலிங் ஆகியோர் கலந்துகொண்டு ஜோசப் ஸ்கூலிங்குக்காக விருதை அமைச்சர் கிரேஸ் ஃபூவிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். 21 வயதாகும் ஜோசப் கடந்த ஆண்டு நடந்த ஒலிம் பிக் விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார். இப்போது அமெரிக்- கப் பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்வி பயிலும் ஜோசப் ஸ்கூலிங் 'ஸ்கைப்' மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!