ஆர்சனலை பிழிந்தெடுத்த பயர்ன் மியூனிக்

மியூனிக்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் கடைசி 16 குழுக்களிடையிலான போட்டியில் பயர்ன் மியூனிக்குடனான முதல் சுற்று ஆட்டம் நேற்று அதிகாலை மியூனிக்கில் நடைபெற்றது. இதில் ஆர்சனலை பிழிந் தெடுத்த பயர்ன் குழு 5=-1 என்ற கோல் எண்ணிக்கையில் அந்தக் குழுவை வெற்றி கொண்டது. கடந்த ஆறு காற்பந்துப் பரு வங்களில் முதல் சுற்று ஆட்டங் களிலேயே போட்டியிலிருந்து வெளியேறிய ஆர்சனல், இந்த முறை அதற்கு அடுத்த நிலை போட்டியின் முதல் சுற்றில் தோல்வியைத் தழுவியதோடு அல்லாமல், ஆட்டத் தின் பெரும் பகுதியை பயர்ன் குழு தனது ஆதிக்கத்தில் எடுத் துக்கொள்ள விட்டுவிட்டது. ஆட்டத்தின் 11ஆம் நிமிடத்தில் பயர்ன் மியூனிக் குழுவின் ஆர்யன் ரோபன் கிட்ட்த்தட்ட 25 மீட்டர் தூரத்திலிருந்து கோல் போட்டு அசத்தினார்.

பயர்ன் மியூனிக்குக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சனலின் அலெக்சிஸ் சாஞ்செஸ் பெனால்டி வாய்ப்பை நழுவ விட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!