லெஸ்டரை வீழ்த்திய செவ்வியா

ஸ்பெயின்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் லெஸ்டர் சிட்டியை 2=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செவ்வியா. செவ்வியாவின் சொந்த மண்ணில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் லெஸ்டர் குழு தோல்வியைத் தழுவினாலும் சாம்பியன்ஸ் லீக் பட்டியலில் எட்டு இடங்களில் ஒன்றைத் தக்கவைத்துக்கொள்ளும் நம்பிக்கையோடு உள்ளது. அக்குழுவின் ஜேமி வார்டி சாம்பியன்ஸ் லீக் தொடரில் தனது முதல் கோலையும் தனது குழுவிற்கான ஒரே ஒரு கோலையும் புகுத்தினார். ஒரு கோல் மட்டுமே போட்டாலும் செவ்வியாவின் பல கோல் முயற்சிகளைச் சிறப்பாகத் தடுத்து விளையாடியது லெஸ்டர். செவ்வியா குழுவிற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோர்ரா கோலாக மாற்ற முயல, கேஸ்பர் அந்தப் பந்தைக் கோலாகவிடாமல் தடுத்தாடினார்.

மேலும் செய்திகள்: தமிழ்முரசு இ-பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!