ரியால், பார்சிலோனா வெற்றி

மட்ரிட்: ஸ்பானிய லீக் காற்பந்துப் போட்டியில் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் ரியால் மட்ரிட்டும் பார்சிலோனாவும் வெற்றி பெற்றுள்ளன. வியாரியாலுக்கு எதிரான ஆட்டத்தை 3-2 எனும் கோல் கணக்கில் ரியால் கைப்பற்றியது. ஒரு கட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வியாரியால் முன்னிலை வகித்தது. துவண்டுவிடாமல் விளையாடிய ரியால் கடைசி நேரத்தில் தனது விஸ்வரூபத்தைக் காட்டியது. கேரத் பேல், கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வாரோ மொராட்டா ஆகியோர் போட்ட கோல்கள் ரியாலுக்கு வெற்றியைத் தேடித் தந்தன. மற்றோர் ஆட்டத்தில் பார்சி லோனா 2-1 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிக்கோ மட்ரிட்டைத் தோற்கடித்தது. ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பார்சிலோனாவின் வெற்றி கோலை மெஸ்ஸி போட்டார்.

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!