ரெனியேரி நீக்கத்திற்குப் பிறகு லெஸ்டர் வெற்றி

லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத் தில் லிவர்பூலை 3-1 எனும் கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளர் லெஸ்டர் சிட்டி நேற்று அதிகாலை தோற்கடித்தது. லெஸ்டரின் நிர்வாகியாக இருந்து கடந்த பருவத்தில் லீக் பட்டத்தை அக்குழு வெல்ல முக்கிய காரணமாக இருந்த கிளோடியோ ரெனியேரி அண்மை யில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே லெஸ்டர் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. ரெனியேரி பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, லெஸ்டர் வீரர்களுக்கு அவர் மீது இருந்த நம்பிக்கை இல்லாமல் போனதால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகப் பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டி ருந்தன.

லெஸ்டர் சிட்டியின் டேனி டிரிங்க்வாட்டர் (இடது) பந்தை வலை நோக்கி அனுப்புவதைச் செய்வதறியாது பார்க்கும் லிவர்பூல் வீரர் (வலது). படம்: ஏஎஃப்பி

இன்றைய செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!