பார்சிலோனா கோல் மழை

மட்ரிட்: ஸ்பானிய லீக் காற்பந்து ஆட்டத்தில் ஸ்போர்டிங் குழுவைப் பந்தாடியது பார்சிலோனா குழு. கடந்த வாரம் நடைபெற்ற சாம் பியன்ஸ் லீக் ஆட்டத்தில் பிரெஞ்சுச் குழுவிடம் 4-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வி கண்டது ஸ்பெயினின் முன்னணி குழுக்களில் ஒன்றான பார்சி லோனா. அதனால் சாம்பியன்ஸ் லீக் போட்டியிலிருந்து வெளியேறும் அபயாத்திலும் அது உள்ளது. ஆனால் பார்சிலோனா தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சற்றே மறக்கும் விதமாகத் தனது சொந்த நூ காம்ப் அரங்கில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஸ்போர்டிங் குழுவை 6-1 என்ற கோல் கணக்கில் அது வீழ்த்தியது. பார்சிலோனாவின் கோல் மழைக்கு முக்கிய காரணமாக அதன் நட்சத்திர வீரர் மெஸ்ஸி இருந்தார்.

ஸ்பானிய லீக் காற்பந்து ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் குழுவிற்கு எதிராகப் பந்தை தலையால் முட்டி கோல் போடும் முயற்சியில் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!