‘ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்’

ஆன்ஃபீல்ட்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து தொடரில் இன்று நள்ளிரவு நடக்கவுள்ள ஆட்டத்தில் லிவர்பூலுடன் மோதுகிறது ஆர்சனல். சில பருவங்களுக்கு முன்னர் ஆர்சனல் லிவர்பூலிடம் 5=1 என மோசமாகத் தோற்றது. அந்த ஆட்டத்தில் முதல் 20 நிமிடத்தில் நான்கு கோல்களை புகுத்தியது லிவர்பூல். எனவே, "இன்றைய ஆட்டத்தின் முதல் 20 நிமிடத்தை ஆர்சனல் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும்," என்று கூறியுள்ளார் அதன் முன்னாள் வீரர் பால்மெர்சன். "லெஸ்டருக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை விளையாடிய ஆட்டத்தில் லிவர்பூல் குழுவும் மோசமாக விளையாடியது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் அவ்வளவு மோசமாக விளையாடமாட்டார்கள் என்று எண்ணுகிறேன். எனவே, இந்த ஆட்டம் சமநிலையில் முடியவும் வாய்ப்புள்ளது," என்றார் அவர். லிவர்பூலைவிட ஒரு புள்ளி மட்டுமே அதிகம் பெற்று பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள ஆர்சனல் லிவர்பூலைவிட ஒரு ஆட்டம் குறைவாகவே விளையாடியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!