‘மீண்டும் ஒரு பொற்காலம் தொடங்கும்’

மான்செஸ்டர்: நட்சத்திர ஆட்டக் காரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச் அடுத்த பருவத்திலும் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவில் தொடர்ந்து, அக்குழுவின் புதிய பொற்காலத்தைத் தொடங்கி வைப் பார் என்று அதன் நிர்வாகி ஜோசே மொரின்யோ நம்பிக்கை தெரிவித் துள்ளார். சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் கிண்ண இறுதிப் போட் டியில் 35 வயதான ஸ்லாட்டன் அடித்த இரண்டு கோல்களே யுனைடெட் குழு கிண்ணம் வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தன. இக்கிண்ணத்துடன் சேர்த்து தனது காற்பந்து வாழ்க்கையில் இதுவரை 31 கோல்களை வென்று இருக்கிறார் ஸ்லாட்டன். இந்தப் பருவத் தொடக்கத்தில் யுனைடெட் குழுவுடன் இணைந்த அவரது ஒப்பந்தத்தை மேலும் ஓர் ஆண்டிற்கு நீட்டிக்க அக்குழு ஆவலாக இருப்பதாகத் தெரிகிறது.

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிற்காக இந்தப் பருவத்தில் இதுவரை 26 கோல்களை அடித்துள்ளார் 35 வயதான ஸ்லாட்டன் இப்ராகிமோவிச். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!