இங்கிலிஷ் பிரிமியர் லீக்: கோண்ட்டே: செல்சியின் கவனம் சிதறக்கூடாது

லண்டன்: வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் 2=1 எனும் கோல் கணக்கில் செல்சி வாகை சூடியது. இந்த வெற்றியின் விளைவாக லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவைவிட செல்சி 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று வலுவான நிலையில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், தமது குழு வெற்றி அடைந்திருப்பது குறித்து செல்சியின் நிர்வாகி அண்டோனி யோ கோண்ட்டே மகிழ்ச்சி தெரி வித்தார். இருப்பினும், தொடர்ந்து வெற்றிகளைச் சுவைத்து வருவ தால் மெத்தனப்போக்குடன் இருந்துவிடக்கூடாது என்று அவர் தமது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "லீக் பட்டத்தை வெல்ல ஆசைப்படுவது நல்ல விஷயம் தான். ஆனால் இந்த இலக்கை அடையவேண்டுமாயின் செல்சி வீரர்கள் தங்கள் கவனத்தைச் சிதறவிடக்கூடாது," என்று கோண்ட்டே வலியுறுத்தினார்.

செல்சியின் விக்டர் மோசஸ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!