ஸ்டோக் சிட்டியிடம் ஏமாந்த மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டமொன்றில் ஸ்டோக் சிட்டி, மான்செஸ்டர் சிட்டி குழுக்கள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனால் மேன் சிட்டிக்குப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள செல்சியுடனான புள்ளி இடை வெளியைக் குறைக்க முடியாமல் போனது மட்டுமல்லாமல் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் நம்பிக் கையும் ஆட்டம் கண்டுள்ளது. இந்தப் போட்டியில் மேன் சிட்டி குழு வெற்றி பெற்றிருந்தால், டோட்டன்ஹம்மை பின்னுக்குத் தள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கலாம். முதல் பாதி ஆட்டத்தில் மந்தமாக விளையாடியது சிட்டி குழு. ஆனால் பிற்பாதி ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரராக டேவிட் சில்வா களமிறங்கிய பிறகு சுறுசுறுப்பாக விளையாடியது சிட்டி குழு. அப்போதும் சிட்டியால் கோல் எதுவும் போடமுடியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!