பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் சுற்றில் பாரிஸ் செயிண்ட் ஜெர் மேன் குழுவிடம் அடைந்த தோல் விக்கு இரண்டாவது சுற்றில் பதிலடி கொடுத்தது பார்சிலோனா. முதல் சுற்றில் 0-4 எனப் படுதோல்வியடைந்த ஒரு குழு, இரண்டாவது சுற்றில் அந்த முடிவை மாற்றி காலிறுதிக்குத் தகுதி பெறுவது சாம்பியன்ஸ் லீக் வரலாற்றிலேயே முதல் முறை ஆகும். பிஎஸ்ஜி குழுவுக்கு எதிராக முதல் சுற்றில் ஒரு கோல்கூட போடாத பார்சிலோனா இரண்டாவது சுற்றில் ஆறு கோல்களைப் புகுத்தி 6-=5 என்ற ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், முதல் சுற்றில் நான்கு கோல்களைப் போட்ட பிஎஸ்ஜியால் பார்சிலோனாவின் சொந்த அரங் கில் நடந்த இந்த ஆட்டத்தில் ஒரே ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது.
பார்சிலோனாவின் வெற்றியை உறுதி செய்யும் கோலைப் புகுத்திய செர்ஜி ரொபேட்டோ. படம்: ஏஎஃப்பி