வெங்கர்: மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டமொன்றில் லின்கன் குழுவை 5=0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வீழ்த்தியது. பயர்ன் மியூனிக் குழுவிடம் அடைந்த தோல்விக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றியானது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறினார் ஆர்சனல் நிர்வாகி வெங்கர். கடைசி ஏழு ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியைத் தழுவியது ஆர்சனல். "ஏமாற்றமான முடிவுகளால், எங்களது நம்பிக்கை தளர்ந்து போய் இருந்தது. "இரண்டாம் பாதி ஆட்டத் தின்போது நம்பிக்கை வந்த பிறகு, எங்களது ஆட்டத்தின் தரமும் உயர்ந்தது. "எஃப்ஏ கிண்ணத்தில் லின்கன் குழு தங்களது திறனை வெளிப்படுத்திய விதம் பாராட்டு தலுக்குரியது," என்றார் வெங்கர். பிரிமியர் லீக் பட்டியலில் இல்லாத லின்கன் குழு, முதல் பாதி ஆட்டம் வரை தங்களது திறமையான ஆட்டத்தால் ஆர் சனலைக் கோல் போட விடாமல் தடுத்தது.

லின்கன் வீரர்களுடன் பந்துக்காக மோதியபோது, லூக் வாட்டர்ஃபால், சீயன் ரகெட் (வலது) ஆகிய இருவருக்குமிடையே சிக்கிய ஆர்சனல் வீரர் ஒலிவியர் ஜிரூட் காயமடைந்தார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!