‘செல்சிக்கு அதிக விருதுகள் பெற்றுத் தந்தவன் நான்’

ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ்: மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்யோவை ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த ஜுடாஸுக்கு செல்சி காற்பந்து குழு ரசிகர்கள் ஒப்பிட்டு அவரைக் கேலி செய்த நிலையில், அந்தக் குழுவுக்கு தான் மட்டுமே இதுவரை அதிக விருதுகளைப் பெற்றுத் தந்த ஒரே நிர்வாகி என ஜோசெ மொரின்யோ பதிலடி கொடுத்- துள்ளார். இங்கிலிஷ் லீக்கின் எஃப்ஏ கிண்ண காலிறுதிச் சுற்று ஆட்டம் நேற்று அதிகாலை செல்சி குழுவுக்கும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கும் இடையே செல்சியின் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் மைதானத் தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் யுனை- டெட் குழு 0=1 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் அது அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது. ஆனால், தமது அணியின் தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத மொரின்யோ, செல்சி ரசிகர்களின் கேலிக்கு சரியான பதிலடி கொடுத் தார்.

செல்சி அணியுடனான நேற்றைய எஃப்ஏ கிண்ண காலிறுதி ஆட்டத்தில் இங்கோலோ காண்டே போட்ட கோலை படத்தில் காணலாம். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!