ஐரோப்பிய குழுக்கள் மோதும் ஐசிசி காற்பந்து - நுழைவுச்சீட்டு விற்பனை

காற்பந்துப் பட்டியலில் முதல்நிலை யில் இருக்கும் செல்சி, ஜெர்மானிய ஜாம்பவான் பயர்ன் மியூனிக், இத்தாலியின் இன்டர் மிலான் ஆகிய முன்னணிக் காற்பந்துக் குழுக்கள் பங்கேற்கும் அனைத் துலகச் சவால் கிண்ணப் (இன்டர் நேஷனல் சேலஞ் கப், ஐசிசி) போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இம்மாதம் 30ஆம் தேதி முதல் தொடங்குகிறது. குறைந்தபட்ச நுழைவுச்சீட்டுக் கட்டணம் $25. ஸ்போர்ட்ஸ் ஹப் பாக்ஸ் ஆஃபிஸ், சிங்கப்பூர் போஸ்ட் மையங்கள் அல்லது ww.sportshubtix.com.sg என்ற இணையத்தளத்தில் நுழை வுச்சீட்டுகளைப் பெறலாம். முன்னணி ஐரோப்பியக் காற்பந்துக் குழுக்கள் பங்குபெறும் இந்த அனைத்துலகச் சவால் கிண்ணம் உலகின் பல பகுதி களில் நடைபெறும். வரும் 2020ஆம் ஆண்டு வரை இந்தப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற இருக்கின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!