சிங்கப்பூர் காற்பந்துச் சங்க நிர்வாகிகளுக்கான முதல் தேர்தல்

சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அதன் அலுவலக நிர்வாகிகளைத் தேர்ந் தெடுப்பதற்காக முதன் முறையாக தேர்தல் நடத்தவுள்ளது. அடுத்த மாதம் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. பல மாதங்கள் அமைதிகாத்த பிறகு தேர்தல் குறித்த அறிவிப்பு சங்கத்தின் 44 உறுப்பினர்களுக் கும் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டது. சிங்கப்பூர் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கும் சிறப்புக் கூட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய தலைமையை சங்கத்தின் உறுப்பினர்கள் அந்தக் கூட்டத் தில் தேர்ந்தெடுப்பர். தேர்தலின்போது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தை வழி நடத்திச் செல்ல 15 மன்ற நிர் வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!