புஜாரா இரட்டை சதம்; இந்தியா முன்னிலை

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில், இந்திய வீரர் புஜாரா விக்கெட்டை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ஒரு பக்கம் போராடினாலும் மறுபக்கம் அவர் இரட்டை சதம் விளாசி இந்தியாவை முன்னிலைப் பெறச் செய்துள்ளார். நேற்றைய நான்காம் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 603 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது இந்திய அணி. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வார்னர், லயன் விக்கெட்டுகளை இழந்து 23 ஓட்டங்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. 6 விக்கெட்டுகள் இழப்புடன் நேற்றைய ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. கடைசியில் புஜாரா 525 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் 202 ஓட்டங்கள் எடுத்து லயன் பந்தில் மேக்ஸ்வெலிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். ரித்திமான் சாஹா 233 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 117 ஓட்டங்கள் எடுத்து ஓகீஃபை பந்தில் மேக்ஸ்வெலிடம் 'கேட்ச்' கொடுத்து ஆட்டமிழந்தார். புஜாராவும் சாகாவும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களைச் சேர்த்தனர்.

ஓட்டங்களைக் குவிக்க ஓடும் இந்திய வீரர்கள் ரித்திமான் சாகா, புஜாரா. படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!