எதிரணி மண்ணில் லெஸ்டர் வெற்றி

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் முதல் முறையாக எதிரணி மைதானத்தில் வெற்றியைச் சுவைத்துள்ளது லெஸ்டர். மேலும் இதன் மூலம் 'ரெலிகேஷன்' நிலைக்குத் தள்ளப் படும் அபாயத்தில் இருந்து ஓரளவு மீண்டுள்ளது லெஸ்டர் குழு. வெஸ்ட் ஹேம் குழுவை அதன் சொந்த மைதானத்தில் சந்தித்த லெஸ்டர், முதல் ஏழு நிமிடத்தில் இரண்டு கோல்களைப் போட்டு, ஆட்டத்தைத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தது லெஸ்டர். எதிரணி கோல் காப்பாளரைத் தாண்டி ரியாத் மஹ்ரிஷ் உதைத்த பந்து கோல் வலையை முத்தமிட லெஸ்டரின் கோல் எண்ணிக்கை தொடங்கியது. 7வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டார் ராபர்ட் ஹுத். லெஸ்டரின் கோல்களை சமன் செய்ய முயன்ற வெஸ்ட் ஹேம் 20வது நிமிடத்தில் முதல் கோலை போட்டது.

லெஸ்டர் குழுவிற்காக மூன்றாவது கோலைப் புகுத்தப் போராடும் ஜேமி வார்டி (வலது). படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!