வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தைக் கைப்பற்றிய பாகிஸ்தான் இரண்டாவது ஆட் டத்திலும் வெற்றி பெற்று உள்ளது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் பூவா தலையா வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் திணறியது. 20 ஓவரில் பாகிஸ்தான் 132 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோயப் மாலிக் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதையடுத்து 133 ஓட்டங்கள் என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீசும் திணறியது. 19 ஓவர் முடிவில் 7 விக்கெட்டு களை இழந்து 119 ஓட்டங்கள் எடுத்தது.

பாகிஸ்தான் வீரர் அகமது ஷெஸாத்திடம் தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் இருக்க முயன்ற வெஸ்ட் இண்டீசின் சாட்விக். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!