முன்னாள் மேன்யூ பிரபலங்களைக் காணத் திரண்ட ரசிகர்கள்

மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் முன்னாள் வீரர்களான ரையன் கிக்ஸும் (நீலச் சட்டை) கேரி நெவிலும் சிங்கப்பூருக்கு வருகை புரிந்துள்ளனர். உட்லீ பார்க்கில் நேற்று 'தி அரினா அண்ட் கஃபே ஃபுட்பால்' திறப்புவிழாவில் அவர்கள் கலந்துகொண்டனர். இவ்விருவரும் இணைந்து 2013ஆம் ஆண்டு பிரிட்டனில் 'கஃபே ஃபுட்பால்' உணவகத்தைத் தொடங்கினர். பிரிட்டனுக்கு வெளியே முதன்முதலாக அதன் கிளை திறக்கப்படுவது சிங்கப்பூரில்தான். மாலையில் தரப்புக்கு ஐவர் அடங்கிய இரு அணிகளுக்கு அவர்கள் தலைமை தாங்கி 'கஃபே ஃபுட்பால்' கிண்ண இறுதிப் போட்டியில் மோதினர். (படத்தில்) கிக்ஸுடன் இணைந்து பந்தை உதைத்து மகிழும் கல்வி மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் நாடாளுமன்றச் செயலாளர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!