ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் அதிகபட்ச இலக்கை எட்டிய கோல்கத்தா அணி

ராஜ்கோட்: டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு விக்கெட்டைக் கூட பறிகொடுக்காமல் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி படைத்துள்ளது. பத்தாவது ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத் தில் குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயித்த 184 என்ற இலக்கை 14.5 ஓவர்களிலேயே கோல்கத்தா அணி எட்டியது. அவ்வணியின் தொடக்க வீரர்களான கௌதம் காம்பீர் 48 பந்துகளில் 76 ஓட்டங் களையும் கிறிஸ் லின் 41 பந்து களில் 93 ஓட்டங்களையும் விளாசி இறுதிவரை களத்தில் இருந்தனர். இதன்மூலம் ஐபிஎல் போட்டி களில் அதிக ஓட்டங்கள் குவித்த தொடக்க இணை என்ற சாத னையையும் காம்பீர்-லின் இணை படைத்தது. 2013ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் திலகரத்னே தில்ஷான் -கிறிஸ் கெய்ல் இணை புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 167 ஓட்டங்களைச் சேர்த்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

89 பந்துகளில் 184 ஓட்டங்களைச் சேர்த்து வரலாறு படைத்த கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க பந்தடிப்பாளர்கள் கிறிஸ் லின் (இடது) - கௌதம் காம்பீர். படம்: பிசிசிஐ

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!