மீண்டும் கோம்பனியின் அதிரடி

சௌத்ஹேம்டன்: கோம்பனியின் வருகையால், பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது மான் செஸ்டர் சிட்டி. நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் சௌத்ஹேம்டன் குழுவை 0=3 என வென்றது சிட்டி. பிற்பாதி ஆட்டத்தின்போது சிட்டி குழுவிற்கான முதல் கோலைப் புகுத்தினார் வின்சென்ட் கோம்பனி. 20 மாதங்களுக்குப் பிறகு அவர் புகுத்திய முதல் கோல் இது. காயம் காரணமாக நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த கோம்பனி, நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கினார். சில்வா கொடுத்த பந்தை 55வது நிமிடத்தில் கோம்பனி கோலாக மாற்றியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. அதன்பிறகு, லிரோய் சனியும் செர்ஜியோ அகுவேரோவும் அடுத் தடுத்த கோல்களைப் புகுத்தினர். கோம்பனியின் வழிகாட்டுதலில் சிறப்பாக விளையாடிய சிட்டிக்கு எதிராக கோல் போடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியா மல் தடுமாறியது சௌத்ஹேம்டன்.

சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதிரான ஆட்டத்தின்போது, மீண்டும் களமிறங்கிய கோம்பனியின் அதிரடியால் வெற்றி பெற்றது மான்செஸ்டர் சிட்டி. படம்: ஏஎஃப்பி