சொந்த மண்ணில் பெங்களூரு சொதப்பல்; புனே அசத்தல்

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை ரைசிங் புனே அணி வெற்றி கொண்டது. பூவா தலையா வென்ற பெங்களூரு அணி பந்து வீச தீர்மானித்ததையடுத்து, முதலில் பந்தடித்த புனே அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. புனே அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் திரிபாதி 31, ரகானே 30 ஓட்டங்கள் எடுத்தனர். அதேபோல், அணித் தலைவர் ஸ்மித் 28, டோனி 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, 162 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் தொடக்க வீரர் மன் தீப் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த விராத் கோஹ்லியும் டிவில்லியர்சும் ஓட்டங்களைச் சேர்த்தனர்.

புனேவின் மனோஜ் திவாரியை ஆட்டமிழக்கச் செய்த பெங்களூரு வீரர் கேதார் ஜாதவ். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!